உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: மூக்கிரட்டை

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


மூக்கிரட்டை:

  • கப இருமல் , ஆஸ்துமா குணமாக மூக்கிரட்டை வேரும் அருகம்புல்லும் தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மிளகு (10) எடுத்து  பொடிசெய்து சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கால் லிட்டர் ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். ஆறிய பின் வடிகட்டி, அந்தக் கஷாயத்தை தினமும் மூன்று வேளைக்கு உட்கொண்டு வந்தால் கப இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாவதோடு கீழ் வாதமும் மூச்சுத் திணறலும் தீரும்.
  • மங்கலான பார்வை , மாலைக்கண் குணமாக மூக்கிரட்டை வேர்ச் சூரணத்தை காலை, மாலை என இரு வேளையும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதனுடன் தேன் சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வந்தால்  மங்கலான பார்வை தெள்ளத் தெளிவாகும். மாலைக்கண் நோய் தீரும்.
  • முகவாத நோயிலிருந்து குணமாக மூக்கிரட்டை வேர்ப்பட்டைச் சூரணம்,மாவிலங்க மரப்பட்டைச் சூரணம்,வெள்ளைச் சாரணை வேர்ச்சூரணம்  ஆகியவற்றை தலா 20 கிராம் எடுத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து 250 மி.லி தண்ணீரில் போட்டு  இரவில் ஊறவைத்துவிட வேண்டும். பின்பு  காலையில் அதனை 50 மி.லி. ஆகும் வரை நன்கு கொதிக்கவைத்து, பின்னர் ஆறவைத்து வடிகட்டி கஷாயத்தைத் தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கஷாயத்தில் 60 மி.லி. நண்டுக்கல் பற்பம் சேர்த்து தினமும் காலை பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 60 முதல் 90 நாட்களுக்குள்ளாக முகவாத நோயில் இருந்து நலம் பெறலாம்.
  • கீழ்வாதம் குணமாக மூக்கிரட்டை வேருடன், சிறிது சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். இவற்றை மஞ்சள் காமாலை உள்ளவர்கள் குடிக்கலாம். வாதம், கீழ்வாதத்தால் ஏற்படும் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். வாரம் ஒருமுறை எடுத்துக் கொண்டால் கல்லீரல், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மருந்தாகிறது. 
  • மூக்கிரட்டை தேனீர் தயாரித்தல் மூக்கிரட்டை இலை, வேர், தண்டு ஆகியவற்றை சிறிதளவு  எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும் . சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் குடிக்கலாம். இது கண்களுக்கு ஒளியை தருகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்கிறது. உடல் வலியை போக்குகிறது. வீக்கத்தை உடனடியாக கரைக்கிறது.
  • யூரியா அளவு குறைய மூக்கிரட்டை கீரை அரைத்து சாறு கால் டம்ளர் அளவுக்கு எடுத்து,  துத்தி வேர்
  • ‎(10 கிராம்) ,கறுஞ்சீரகம் ‎(1 ஸ்பூன்) சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் ரத்தத்தில் இருக்கும் யூரியா கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்தம் சுத்தமாகும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT