உணவே மருந்து

அத்திப்பழம் பற்றி 'இந்த' ஐந்து விஷயங்கள் தெரியுமா?

அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடல் எடை குறைக்க உதவுகிறது.

உமா பார்வதி

உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? தினமும் இரண்டு அல்லது மூன்று உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடத் தொடங்குங்கள்.

அத்திப்பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். கால்ஷியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு கருவுறும் திறன் அதிகரிக்கும்.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்கிறது.

உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் சாப்பிடுவதே சிறந்தது. தினமும் மூன்று அல்லது நான்கு உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிட்டு வர, செரிமான மண்டலம் சீராகி,, மலச்சிக்கல் பிரச்னைகள் குணமாகும்.  

ஆனால் அதிகமான அளவில் இந்தப் பழத்தை சாப்பிட்டால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். உலர்ந்த அத்திப் பழத்தில் உள்ள சல்ஃபைட் உடல் நலத்துக்கு கெடுதலை விளைவிக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!

ஆசியக் கோப்பைக்கு முன் டி20 அணிக்கு திரும்பும் ஷுப்மல் கில்! ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்!

SCROLL FOR NEXT