உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: இரணகள்ளி

வீட்டில் கொசு வராமல் தடுக்க

தினமணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


இரணகள்ளி:

  • ஆறாத புண்கள்  ஆற இரணகள்ளி இலையை மை போல் அரைத்து, ஆறாத புண்களின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக புண்கள் ஆறும்.
  • கால் ஆணி , மரு , பாலுண்ணி மறைய இரணகள்ளி இலையின் சாற்றை எடுத்து அவற்றை  மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொர சொரப்பான மருக்கள் பேரில் இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி  பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வந்தால் அவைகள் விரைவில் மறையும்.
  • வீட்டில் கொசு வராமல் தடுக்க இரணக்கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.
  • சிறுநீரகக் கற்களை உடனடியாக கரைக்க இரணகள்ளி இலையை சிறுநீரக கற்கள் உளாளவர்கள் அதிகாலையில்  வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்து வந்தால் 4 வது நாள் சிறுநீரககற்கள் வெளியேறிவிடும். இதை அறிய, சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் குணமாவது கண்கூடத் தெறியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.
  • தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு (500 மில்லி) , தேங்காய் எண்ணை (400 மில்லி) , அதனுடன் கஸ்தூரி மஞ்சள் (10 கிராம்) ,  நீரடிமுத்து (20 கிராம்) , கார்போக அரிசி (30 கிராம்) , மஞ்சள் (40 கிராம்) , கசகசா (5 கிராம்)  சேர்த்து இடித்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவந்தால் குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் அனைத்தும் நீங்கும்.
  •  

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

SCROLL FOR NEXT