உணவே மருந்து

குளிர்ச்சியால் உண்டாகும் சளி மற்றும் வாய், தொண்டையில் உண்டாகும் வீக்கம் குணமாக

கோவை பாலா

 
அறிகுறிகள் : தண்ணீரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பொழுது பனிக் கட்டியாகிறது. அதன் நிறம் வெண்மை. அதுபோல் நம் உடலில் உள்ள நீர்நிலைகள் (MUCUS) அதிக குளிர்ச்சியால் கெட்டியாகிவிடும். இதனால் சளி வெண்மை நிறமாக வரும். மேலும் நரம்பு மண்டல பாதிப்பினால் வாய் மற்றும் தொண்டையில் உண்டாகும் வீக்கம்.

மண்டலம் - நரம்பு மண்டலம்
காய் - கொத்தவரங்காய்
பஞ்சபூதம் - காற்று 
மாதம் - ஆனி
குணம் - எளிமை
ராசி/லக்கினம்  -  மிதுனம் 

சத்துக்கள் : இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு :  கொத்தவரங்காயுடன்(5) , புடலங்காய் (100 கிராம், தோல், விதையுடன்), கோவக்காய் (5) மூன்றையும் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா (சிறிதளவு), தக்காளி (1) சேர்த்து  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் மாலையில் குடித்து வரவும். பின்பு வழக்கமாக உண்ணக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT