உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- தொண்டைக்கட்டு நீங்க சுக்குப் பொடியை தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டுவந்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.
- நாவறட்சி குணமாக சுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நாவறட்சி குணமாகும்.
- மூட்டு வலி , வாயுத்தொல்லை நீங்க தோல் நீக்கிய சுக்கை (2 கிராம்) , பசும்பாலில் (2 லிட்டர்) போட்டுக் கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி , வாயுத் தொல்லை , உடல் அசதி போன்றவை குணமாகும்.
- பல்வலி குறைய சுக்குத் துண்டை தோல்நீக்காமல் வாயில் போட்டு மென்றால் பல்வலி குறையும்.
- தலைச்சுற்றல் , தலை வலி வராமல் தடுக்க சுக்கை அடிக்கடி கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் தலைவலி , தலைச்சுற்றல் போன்றவை வராது.
- மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் குணமாக சுக்கு , மிளகு , திப்பிலி , அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து கஷாயமாக்கிக் குடித்து வந்தால் காய்ச்சல் , வாய்ப்புண் , மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் போன்றவை குணமாகும்.
- வயிற்றுவலி குணமாக சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் கடுமையான வயிற்றுவலி குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com