உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: அதிமதுரம்

DIN

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் நீங்க அதிமதுரம், கீழாநெல்லி, சீரகம் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் பொடியை தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டுவந்தால் கல்லீரல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
  • இளநரை, தலைமுடி உதிர்தல் தடுக்க அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை முடி உதிர்தல் இருக்காது.
  • அடிக்கடி வரும் தலைவலி குணமாக அதிமதுரம், சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி வரும் தலைவலி முழுமையாக குணமாகும்.
  • இளவயதில் உண்டாகும் வழுக்கை நீங்கி முடி வளர அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும்  முடி முளைக்கும.
  • அனைத்து விதமான சளி, இருமல், ஆஸ்துமாவிற்கு சிறந்த நிவாரணம் அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும்.
  • தொண்டை சார்ந்த நோய்கள் குணமாக அதிமதுரம், ஆடாதொடை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவு காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால்  தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT