உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: துத்திக் கீரை

உடல் வலிகள் நீங்க துத்திக் கீரையைத் தண்ணீரில் போட்டு வேகவைத்தப் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டித் குளித்து வந்தால் உடல் வலிகள் நீங்கும்.

DIN

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • உடல் வலிகள் நீங்க துத்திக் கீரையைத் தண்ணீரில் போட்டு வேகவைத்தப் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டித் குளித்து வந்தால் உடல் வலிகள் நீங்கும்.
  • வெள்ளைப் படுதல் குணமாக துத்திக் கீரை (ஒரு கைப்பிடி ) எடுத்துக்கொண்டு அதனுடன் கடுக்காய் (ஒன்று) தட்டிப்போட்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் வெள்ளைப் படுதல்  குணமாகும்.
  • ஆண்மைக் குறைவு நீங்க துத்திக் கீரை(ஒரு கைப்பிடி) எடுத்து அதனுடன் சிறிதளவு கற்கண்டு சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
  • மூல நோய் குணமாக துத்திக் கீரைச் சாறு (அரை டம்ளர்) அளவு எடுத்து அதனுடன் பாதியளவு பசு மாட்டுப் பால் கலந்து  காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.
  • கை, கால் பிடிப்புகள் குணமாக சிறு துத்தி இலையை  எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய்யைச் சேர்த்து நன்றாக வதக்கி பிடிப்புகள் உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் பிடிப்புகள்  குணமாகும்.
  • ஆசனவாய்க் கடுப்பு நீங்க துத்திக் கீரையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சாறு (அரை டம்ளர் ) அளவு எடுத்து அதனுடன் சர்க்கரை மற்றும் பசும்பால் சேர்த்துக் குடித்து வந்தால் ஆசனவாய்க் கடுப்பு நீங்கும்.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

ஏறுமுகத்தில் இந்திய ஏற்றுமதி

வோடஃபோன் ஐடியா இழப்பு அதிகரிப்பு

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

SCROLL FOR NEXT