உணவே மருந்து

கண்களில் உண்டாகும் கண்புரையை அறுவை சிகிச்சையின்றி எளிதாக குணமாக்கலாம்!

கோவை பாலா

வாயுக்களின் சீரற்ற தன்மையினால் வாயு மண்டலம் பாதிப்படையும் போது நமது கண்களின் மேலுள்ள தசை, தோல் வழியாக வெடித்து வெளியேறும். எனவே வாயுமண்டலத்தின் பாதிப்பால் கண்களில் உண்டாகும் கண்புரை (CATARACT) அறுவை சிகிச்சையின்றி குணமாக

மண்டலம் - வாயு மண்டலம்
காய் - புடலங்காய்
பஞ்சபூதம் - காற்று
மாதம் - ஆடி
குணம் - தியாகம்
ராசி / லக்கினம் - கடகம்

சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிகளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தீர்வு : காலை வேளை உணவாக புடலங்காய் (100 கிராம்), கோவக்காய் (5) , புதினா (சிறிதளவு) ,   இவை அனைத்தையும் நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி அரைத்து  ஜூஸாக்கி காலை வேளை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

புடலங்காய் (100 கிராம் தோலுடன்), அரசாணிக்காய் (100 கிராம் தோலுடன்), புதினா (சிறிதளவு), இவை அனைத்தையும் நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி இரவு வேளை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

முருங்கை விதையிலிருந்து எடுக்கப்பட்ட முருங்கை எண்ணெய்யை தினமும் இரவு படுக்கப் போகும் முன் இரண்டு கண்களிலும் தலா ஒரு சொட்டு வீதம் போட்டு வந்தால் கண்புரை குணமாகும். இரவு உறங்கும் முன் தினமும் 1 டம்ளர் பாலில் 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி கலந்து குடித்து வரவும். பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT