உணவே மருந்து

எலும்புகளும், நரம்புகளும் வலுவடைய உதவும் கஞ்சி

கோவை பாலா

முருங்கை இலை கேழ்வரகு கஞ்சி

தேவையான பொருட்கள்

முருங்கை இலை - 2 கைப்பிடி
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வேர்கடலை வறுத்து பொடித்தது - 50 கிராம்
தண்ணீர் -  அரை லிட்டர்

செய்முறை : முதலில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து ஒரு 15 நிமிடம் கிளறிக் கொண்டே கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனுடன் கேழ்வரகு மாவைக் கலந்து கிளறி ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும். நன்கு வெந்து நிறம் மாறி இரண்டும் நன்றாக கலந்தப் பின்பு முருங்கை இலையைப் போட்டு கிளற வேண்டும். முருங்கை இலை வெந்ததும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

பயன்கள் : எலும்பு மற்றும் நரம்பு வலு குன்றியவர்கள் இந்த கஞ்சியில் இரண்டு அல்லது மூன்று துளி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்தும் அல்லது தேவையான அளவு நாட்டுச் சர்க்கரைச் சேர்த்தோ குடித்து வந்தால் எலும்புகளும், நரம்புகளும் வலுவடையும். மேலும் வயிறு உப்புசம்  மற்றும் தீராத மலக்கட்டு பிரச்னைகளை தீர்க்கும் அற்புதமான ஆரோக்கிய கஞ்சி.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT