உணவே மருந்து

உடல் சூட்டைத் தணித்து வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கஞ்சி

கோவை பாலா

தேங்காய்ப்பால் கஞ்சி

தேவையான பொருட்கள்

அரிசி நொய் - 50  கிராம்
தேங்காய்ப் பால் - 150 மி.லி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 500 மி.லி

செய்முறை

முதலில் தண்ணீரைக் நன்றாக கொதிக்க  வைத்து அதில் அரிசி நொய்யைச் சேர்க்கவும். அத்துடன்  வெந்தயம், பொடியாக நறுக்கிய பூண்டுப் பல் , உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு வேக வைக்கவும். நொய்யரிசி நன்கு வெந்ததும் இறக்கி அவற்றில் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொண்டு பரிமாற வேண்டும். இதுவே தேங்காய்ப் பால் கஞ்சி. 

பயன்கள்

இந்தக் கஞ்சியை அதிக உடல் சூட்டினால் பாதிக்கப்படுபவர்களும்,  வயிற்றில் புண் உள்ளவர்களும் தினமும் ஒரு வேளை உணவாக குடித்து வந்தால் உடல் சூட்டையும், வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்தும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT