உணவே மருந்து

வாய்வு மற்றும் செரிமானக் குறைபாட்டை நீக்கி பசி உணர்வைத் தூண்டும் உணவு

கோவை பாலா

கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்

காய்ந்த கறிவேப்பிலை - 100 கிராம்
சுக்கு - 10 கிராம்
ஓமம் - 10 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - 25 கிராம்
பெருங்காயம் - 2 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கறிவேப்பிலை நன்கு காயவைத்து எடுத்து வாணலியில் போட்டு அதனுடன் சுக்கு, ஓமம், உளுந்து மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தப் பொடியை  தினமும் தோசை, இட்லி, சப்பாத்தி உணவில் சேர்த்து உணவுப் பொடியாக பயன்படுத்தி வந்தால் நமது உடல் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், வாய்வு மற்றும் செரிமானக் குறைபாட்டை நீக்கி பசியுணர்வைத் தூண்ட உதவும் ஆரோக்கிய உணவுப் பொடி. 

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் 

வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT