உணவே மருந்து

நீரிழிவினால் உண்டாகும் அதிக தாகம், வறட்சியை போக்கக் கூடிய ஆரோக்கிய பானம்

கோவை பாலா

கோதுமை கீரைத் தண்டுக் கஞ்சி

தேவையான பொருட்கள்

கீரைத் தண்டு - 100  கிராம்
கோதுமை நொய் - 100  கிராம்
தண்ணீர் - 500 மி.லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை : முதலில் கோதுமை நொய்யை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரையில் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். கீரைத் தண்டை நார் நீக்கி விரலளவு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அவற்றில் கீரைத் தண்டைப் போட்டு வேக வைத்து பாதி வெந்ததும் அவற்றில் கோதுமை நொய்யை போட்டு வேக வைத்து அதனுடன் தேவையான. அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக நீரிழிவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால், அவர்களுக்கு உண்டாகும் அதிக தாகம் மற்றும் வறட்சியைப் போக்கும். மேலும் வயிறு நிறைந்து அதிக நேரம் பசியில்லாமல் இருக்கும் உணர்வை உண்டாக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT