உணவே மருந்து

சகல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் சூப்

கோவை பாலா

 

வெங்காயத்தாள் சூப்

தேவையான பொருட்கள்

வெங்காயத் தாள் -  ஒரு கட்டு
இஞ்சி  -   ஒரு துண்டு
தக்காளி  -    4
தேங்காய்  -   ஒரு மூடி
மிளகு  -  5 கிராம்
கொத்தமல்லித் தழை -  2 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் வெங்காயத்தாள் மற்றும் கொத்தமல்லித் தழைகளை நன்றாக கழுவி பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். பின்பு தக்காளியை நறுக்கி இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து  தக்காளிச் சாறுடன் கலந்து கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்க வைத்த சாறுடன் நெய் மற்றும் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தாளையும் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் உப்பு சேர்த்து இறக்கவும்.

பலன்கள் : இந்த வெங்காயத்தாள் சூப்பை எந்த நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களும் அருந்தலாம், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் : வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT