உணவே மருந்து

அதிகப்படியான பித்தத்தின் அளவைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்க உதவும் கஞ்சி

கோவை பாலா

கொட்டிக் கிழங்கு கஞ்சி

தேவையான பொருட்கள்

கொட்டிக் கிழங்கு மாவு - 50 கிராம்
பசும்பால் - 50  மி.லி
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
தண்ணீர் - அரை லிட்டர்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கொட்டிக் கிழங்கு மாவைத் கரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அப்பொழுது மாவு கட்டி தட்டாமல் கிளறி விட வேண்டும்.

நிறம் மாறி வெந்த நிலை வந்தவுடன் அதனுடன் பசும்பால் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சி உடலின் அதிகப்படியான பித்த தன்மையுள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் அதிகப்படியான பித்தத்தின் அளவைக் குறைக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி. மேலும் உடல் உஷ்ணத்தை குறைத்து வெள்ளைப்படுதல் குறைபாட்டை சீராக்கும் அற்புத கஞ்சி.

படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு 

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT