உணவே மருந்து

வாய்வு பிரச்னையால் அவதிப்படுவோருக்கு அற்புத கீரை

வாய்வுக் குறைபாடுகளால் துன்பப் படுபவர்களுக்கும், வயிற்றுப் பொருமலினால் அவஸ்தைப் படுபவர்களுக்கும் தீர்வைத் தரக்கூடிய அற்புதமான உணவு.

தினமணி

தேவையான பொருட்கள்

வாதநாராயணன் கீரை .     -   ஒரு கைப்பிடி

பூண்டு.     -  15 பல்

நெய்.       -  சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு வாதநாராயணன் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு பற்களைப் ஒன்றிரண்டாக சிதைத்துக் கொள்ளவும்.

இட்லி பாத்திரத்தில் மேல் தட்டில் பொடியாக நறுக்கிய வாதநாராயணன் கீரை மற்றும் பூண்டுப் பல்லை வைத்து  நீராவியில் வேக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய்  ஊற்றி அதில் நீராவியில் வேக வைத்த வாதநாராயணன் கீரை, பூண்டுப் பல் சேர்த்து நன்றாக கிளறி  உணவாக எடுத்துக் கொள்ளவும்.
 
தீரும் குறைபாடுகள்

வாய்வுக் குறைபாடுகளால் துன்பப் படுபவர்களுக்கும், வயிற்றுப் பொருமலினால் அவஸ்தைப் படுபவர்களுக்கும் தீர்வைத் தரக்கூடிய அற்புதமான உணவு.

சாப்பிடும் முறை

மேற்கூறிய குறைபாடு உள்ளவர்கள் மேற்கூறிய முறையில்  வாதநாராயணன் கீரையை வேகவைத்து காலை வேளை வெறும் வயிற்றில் உணவாக உட்கொண்டு வந்தால்  நல்ல பலனைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609

Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

SCROLL FOR NEXT