உணவே மருந்து

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து

தினமணி

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை.  -  150 கிராம்

பூண்டுப் பல்.     -   15

மிளகு.                -   5 கிராம்

உப்பு. -  தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு பசலைக் கீரை எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

பூண்டை நறுக்கிக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பசலைக் கீரையை இட்லி பாத்திரத்திரத்தின் மேல்தட்டில் வைத்து  அதனுடன் பூண்டுப் பல்லையும் வைத்து நன்கு வேக வைக்கவும்.

ஒரு மண் சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி தாளித்து அதில் நீராவியில் வேகவைத்த பசலைக் கீரை மற்றும் பூண்டுபல் மற்றும்  மிளகைத் தூளாக்கிப் போட்டு ஒரு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

உடலில் அதிகப்படியான தேங்கியுள்ள கரைக்க முடியாத கொழுப்புகளை எளிதாக உணவில் மூலம் கரைப்பதற்கு உதவக்கூடிய கீரை

சாப்பிடும் முறை

இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த  பசலைக் கீரையை தினமும் ஒரு வேளை உணவாகவே எடுத்துக் கொள்ளவும்.

முதல் 48  நாட்கள் சாப்பிடவும். பின்பு தேவைக்கேற்ப தொடரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT