உணவே மருந்து

கர்ப்பிணி பெண்களுக்கு உதவக்கூடிய அற்புத கீரை

கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகக் கூடிய மலச்சிக்கலைப் போக்க உதவக் கூடியது அற்புத கீரை.

தினமணி

தேவையான பொருட்கள்

பாலக் கீரை.   -   ஒரு கட்டு

சிறுபருப்பு       -    50 கிராம்

மஞ்சள் தூள்.   -  சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு பாலக் கீரையை எடுத்து சுத்தப் படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறுபருப்பைச் சேர்த்து  மேல்தட்டில் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை வைத்து நீராவியில் வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் நீராவியில் வேகவைத்த பாலக் கீரையைப் போட்டு அதில் வேகவைத்த பருப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி  ஒரு வேளை உணவாக சாப்பிடவும்.
 
தீரும் குறைபாடுகள்

கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகக் கூடிய மலச்சிக்கலைப் போக்க உதவக் கூடியது.

சாப்பிடும் முறை

கர்ப்பிணி பெண்கள் மேற்கூறிய முறையில்  பாலக் கீரையை வேகவைத்து ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் கர்ப்ப காலத்தில் உண்டாகும் தீராத மலச்சிக்கல் தீரும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா, 

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னித்தீவு... ஆன் ஷீத்தல்!

இன்ப அதிர்ச்சி... ஐஸ்வர்யா!

பிகாரில் மூன்றாவது அணியை அமைக்க ஓவைசி மும்முரம்: பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை!

கருப்பு, வெள்ளை... அஸ்லி மோனலிசா

நினைவுகள்... சுதா

SCROLL FOR NEXT