உணவே மருந்து

உடல் பலவீனத்தைப் போக்கும் அற்புத கீரை 

உடல் பலவீனத்தைப் போக்கி உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது இந்த அற்புத கீரையை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

தினமணி

தேவையான பொருட்கள்

பாலக் கீரை.       -   ஒரு கட்டு

சின்ன வெங்காயம். -  50 கிராம்

சீரகம்.      -   ஒரு ஸ்பூன்

மிளகுத் தூள்.   -  தேவையான அளவு

நெய்.   -   சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு பாலக் கீரையை எடுத்து சுத்தப் படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

இட்லி பாத்திரத்தில் மேல் தட்டில் பொடியாக நறுக்கிய பாலக் கீரை மற்றும் சின்ன வெங்காயத்தை வைத்து  நீராவியில் வேக வைக்கவும்.

ஒரு வாணலியில்  சிறிதளவு நெய் ஊற்றி அதில் நீராவியில் வேக வைத்த பாலக் கீரை மற்றும் சின்ன வெங்காயம் மற்றும் மிளகுத் தூள் , சீரகம்  சேர்த்து நன்றாக கிளறி  உணவாக எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

உடல் பலவீனத்தைப் போக்கி உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது

சாப்பிடும் முறை

மேற்கூறிய குறைபாடு உள்ளவர்கள் மேற்கூறிய முறையில்  பாலக் கீரையை வேகவைத்து ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால்  உடல் நல்ல வலிமை அடையும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

SCROLL FOR NEXT