என்கவுன்ட்டரில் 2 நக்சல்கள் சாவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இச்சண்டை ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சோரா கிராமத்தில் புதன்கிழமை நடந்தது.
கச்சோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீஸôரை நோக்கி தூப்பாக்கியால் சுட்டனர். உடனே போலீஸôரும் பதிலடி தந்தனர். இதைத் தொடர்ந்து நடந்த சண்டை புதன்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இதில், நக்சலைட்டுகள் இருவர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
Advertisement
Advertisement
கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களின் தலைக்கு ரூ. 35 ஆயிரம் பரிசு அறிவித்து அரசு தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்களை வியாழக்கிழமை போலீஸôர் மீட்டனர். அப்பகுதியிலிருந்து வெடி மருந்துகள் நிறைய கைப்பற்றப்பட்டன.