முகப்பு
இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 12 மே 2013, 4:08 am IST
பகிர்:

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்களை சேகரித்து கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பார்மர் மாவட்டம் மதாரி கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் கான் (45) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேல் விசாரணைக்காக ரோஷன் கான் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.