முகப்பு
இந்தியா

அபுதாபியில் ஞானானந்த சேவா சமாஜத்தின் 4வது ஆண்டு விழா

சத்குரு ஞானானந்த சேவை சமாஜத்தின் 4வது ஆண்டு விழாவும், ஞான பால விகார், குருஜி பால நாட்டிய மண்டலியின் ஆண்டு விழாக்களும் எதிர்வரும் மார்ச் 29, 30, 31 தேதிகளில் அபுதாபியில் நடைபெற இருக்கிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:58 AM
பகிர்:

சத்குரு ஞானானந்த சேவை சமாஜத்தின் 4வது ஆண்டு விழாவும், ஞான பால விகார், குருஜி பால நாட்டிய மண்டலியின் ஆண்டு விழாக்களும் எதிர்வரும் மார்ச் 29, 30, 31 தேதிகளில் அபுதாபியில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவுக்கு தென்னாங்கூர் ஞானானந்த கிரி பீடத்தின் தற்போதைய குருவான நிரஞ்சனானந்த கிரி சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

உலக நன்மைக்காகவும்; அமைதிக்காகவும்  மார்ச் 29 அன்று  குருஜி திருவடி பூஜையும், நாமசங்கீர்தனமும் நடைபெறும்.

மார்ச் 30 தேதி காலை அபுதாபி இந்திய கலாச்சார மையத்தில் ஞான பால விகார் குழந்தைகளின் பக்தி கலை நிகழ்ச்சிகளும்.

அன்று மாலை திவ்யநாம நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மார்ச் 31 அன்று சுவாமிகள் நிரஞ்சனானந்த கிரி துபாய், ஷார்ஜாவில் பக்தர்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது..சுவாமியின் இந்த சுற்றுபயணத்தில் சென்னை ஜி.ஏ. டிரஸ்ட் உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம்; முத்துசுவாமி; கார்த்திக் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை புரவலர் ரெங்கராஜன், தலைவர் ரெகுநாதன்,  ஹரிஷ், சந்திரசேகர், பாலா, ரமேஷ், ராம்கி, சுமந்த், ஞான பிரகாஷ், பரதன் மற்றும் துபாய் ராமதுரை, வெங்கட்ராமன் மற்றும் பல உறுப்பினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →