முகப்பு
இந்தியா

விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் மனுக்கள் மாயம்

போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் மனுக்கள் மத்தியப்பிரதேச முதல்வர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டன என தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் கூறியுள்ளது.

Updated On : 13 மே 2013, 1:18 am IST
பகிர்:

போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் மனுக்கள் மத்தியப்பிரதேச முதல்வர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டன என தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் கூறியுள்ளது.

இதுதொடர்பாக போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோர் பெண்கள் பிரிவு அமைப்பாளர் அப்துல் ஜப்பார் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 1500 பேரின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மத்தியப்பிரதேச முதல்வர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டன.

இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போபால் விஷவாயு சம்பவம் நடைபெற்று 28-வது ஆண்டை முன்னிட்டு பாதிக்கப்பட்டோர் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

ஆனால் முதல்வர் அலுவலகத்திலோ அவற்றை தொலைத்து விட்டனர். மனுக்கள் தொடர்பாக பலமுறை முறையிட்டும் பலனில்லை. "ஏற்கெனவே அளிக்கப்பட்ட மனுக்கள் எங்களிடம் வரவில்லை. அவற்றின் நகலை தாருங்கள்' என முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தும்படி கோரியும் கூட்டப்படவில்லை. அரசின் இந்த செயல்பாடு 5 லட்சம் பேரை மேலும் பாதிப்படையச் செய்வதாக உள்ளது.

விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.982.75 கோடி நிவாரணத் தொகையில் ரூ.275 கோடியை அபகரிக்க திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்றார் ஜப்பார்.

இப்பிரச்னை குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாக முதல்வரின் செயலாளர் எஸ்.கே.முஸ்ரா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.