முகப்பு
இந்தியா

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க மீண்டும் 'ஆபரேசன் ஸ்மைல்'

காணாமல் போன குழந்தைகளை கண்டுப்பிடித்து அவர்களது பெற்றோர்களிடம் சேர்பதற்கான 'ஆபரேசன் ஸ்மைல்' திட்டம் மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 7 டிசம்பர், 2015 at 9:18 PM
பகிர்:

காணாமல் போன குழந்தைகளை கண்டுப்பிடித்து அவர்களது பெற்றோர்களிடம் சேர்பதற்கான  'ஆபரேசன் ஸ்மைல்' திட்டம் மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சேர்ப்பதற்காக மத்திய அரசு ஏற்கெனவே ஆபரசேன் ஸ்மைல், ஆபரேசன் முஸ்கான் ஆகிய இரு சிறப்பு திட்டங்கள் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டன.

இதன்படி 11,118 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

சிறப்பாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது என மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி வருகிற ஜனவரி மாதம் முழுவதும் ஆபரசேன் ஸ்மைல்-2 திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மகரிஷி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், மாநிலங்களிடையே காணாமல் போகும் குழந்தைகளை கண்டறியும் வகையில் அனைத்து மாநிலங்களும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகளிடையே உரையாடுவதற்காக மொழிபெயர்பாளர்கள், உளவியல் நிபுணர்கள், பாதுகாப்பு மையங்கள், தேவையான மருந்துகள் ஆகியவற்றை மாநில அரசுகள் தயாராக வைத்திருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆபரேசன் ஸ்மைல் நடவடிக்கையின் போது திறமையாக செயல்பட்ட 44 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி பரிசுகளை வழங்கியுள்ளார் என்றார் உள்துறைச் செயலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.