ஜனநாயகம் என்பது தேர்தல் மற்றும் ஆட்சியோடு முடிந்துவிடவில்லை. குடிமகன்கள் ஒவ்வொருவரும் நாட்டு முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம் என்ற உணர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சி என்பதை அனைத்து மக்களுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம் என உணர வேண்டும் என்றார் மோடி.
ஜர்கன் செய்தி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் ஜர்கன் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி இவ்வாறு கூறினார்.
சரக்கு-சேவை வரி மசோதா தவிர ஏழைகளுக்கான பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆனால், எல்லோரும் சரக்கு-சேவை வரி மசோதா குறித்தே பேசுகின்றனர் என்றார் மோடி.
இந்திய விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி என்று குறிப்பிட்ட மோடி, மக்கள் மீதும் அவர்கள் பலத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.