எட்டு வயது பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா
எட்டு வயது சிறுமியை அவரது தாத்தாவும், மாமாவும் பல மாதங்களாக தொடர்ந்து பாலாத்காரம் செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு வயது சிறுமியை அவரது தாத்தாவும், மாமாவும் பல மாதங்களாக தொடர்ந்து பாலாத்காரம் செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அச்சிறுமி கான்பூரில் உள்ள தனது தந்தை வழி தாத்தா பாட்டி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது அவரது தாத்தாவும், மாமாவும் தொடர்ந்து அச்சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
அண்மையில் ஒரு திருமணவீட்டில் தனது தந்தையை சந்தித்த அச்சிறுமி இச்சம்பவம் குறித்து தெரிவித்தார். இதையடுத்து அவர் போலீஸில் புகார் செய்தார்.
Advertisement
போலீஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தலைமறைவாகிவிட்ட தாத்தாவையும், மாமாவையும் போலீஸார் தேடி வருகின்றனர்.