முகப்பு
இந்தியா

தில்லி முதல்வர் அலுவலகம் சோதனையிடப்படவில்லை: ஜேட்லி

தில்லி அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பாகாதன் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்களே தவிர

Updated On : 15 டிசம்பர், 2015 at 3:00 PM
பகிர்:

தில்லி அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பாகதான் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்களே தவிர, கேஜரிவால் அலுவலத்தில் அல்ல என மாநிலங்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

தில்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரான அரவிந்த் கேஜரிவால் அலுவலகத்தில் இன்று காலை மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இந்த சோதனை என்பது கூட்டாட்சி மீதான தாக்குதல் என்றும் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை நிலவுகிறது என்றும் கோஷமிட்டனர்.

Advertisement

இந்த சோதனை என்பது கட்சிகளுக்கு இடையேயான பிரச்னை இல்லை. இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ ப்ரைன் கூறினார். ஐக்கிய ஜனதா கட்சி, இடதுசாரி உறுப்பினர்களும் தில்லி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவையிலிருந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திரினமூல் உறுப்பினருக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் என்பது கூட்டாட்சியின் பிரச்னை அல்ல என்றார். எனினும், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியல், துணைத் தலைவர் குரியன் அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

மீண்டும் அவை கூடியதும், இதே பிரச்னையை எழுப்பிய டெரிக் ஓ ப்ரைன், தில்லி முதல்வர் அலுவலகம் அருகே நடத்தப்பட்ட சி.பி.ஐ. சோதனை குறித்து பேசினார்.

அப்போது பதிலளித்த ஜேட்லி, திரிணமூல் உறுப்பினர் முதலில் தில்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனை என்ற நிலையிலிருந்து முதல்வர் அலுவலகம் அருகே என்று நிலைக்கு வந்திருக்கிறார் என்றார்.

தில்லி முதல்வர் அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்திய சோதனை என்பது, ஜேரிவால் அரசு பதவி ஏற்பதற்கு முன்பே, அதாவது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பேற்தற்கு முன்பு, அங்கு பணியாற்றும் அரசு ஊழியர் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பானது மட்டுமே என்றார்.

இதனிடையே பேசிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜக அல்லாத மாநில அரசுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.