முகப்பு
இந்தியா

பாலித்தின் உபயோகத்தை தடை செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பாலித்தீன் உபயோகத்தை தடை செய்வது என உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2015 at 4:43 PM
பகிர்:

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பாலித்தீன் உபயோகத்தை தடை செய்வது என உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாலித்தீன் மற்றும் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் 'கேரி' பைகள் உத்ர பிரதேச மாநிலம் முழுவதும் தடை செய்யப்படுகிறது. சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலீதீனுக்கான மாற்று பொருளை கண்டறிந்து வருகிறோம். பின்னர் அது பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

Advertisement

எனினும் இந்த தடை உத்தரவு எப்போதிருந்து அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.

வருகிற 31 ஆம் தேதிக்குள் பாலித்தீன் உபயோகத்தை முற்றிலும் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அசோக்குமார் என்பவர் தொடுத்த பொதுநலன் வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி டி.ஓய். சந்திரசூத், நீதிபதி யஷ்வந்த் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.