இந்தியா

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் கர்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி

குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

PTI

குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர் கடந்த 12 ஆம் தேதி, சோலா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில், அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர், தங்களது மகளின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கே.ஜே.தாக்கர், சிறுமியின் எட்டு வார கர்ப்பத்தை கலைப்பதற்கு, மருத்துவ காரணங்களுக்காக கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் சட்டத்தின் கீழ் அனுமதி அளித்து இன்று உத்தரவிட்டார்.

சோலா நகர் போலீஸார் சிறுமியை அங்குள்ள பொது மருத்துவமனைக்கு நாளை அழைத்து சென்று, தற்போதைய மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்து, சிறுமியின் கருவை கலைப்பதற்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT