இந்தியா

இளம்பெண் பாலியல் பலாத்காரம்:உபர் கால்டாக்சி டிரைவருக்கு ஆயுள்

புதுதில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உபர் நிறுவனத்தைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவருக்கு அவர் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுதில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

PTI

புதுதில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உபர் நிறுவனத்தைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவருக்கு அவர் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுதில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மத்திய தில்லியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் குர்கானில் உள்ள ஒரு நிறுவனத்தில் நிதி அலுவலராக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு பணி முடித்து வீடு திரும்பும்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதுகுறித்த தில்லி காவல் துறையினர் உபர் கால்டாக்சி நிறுவனத்தைச் சேர்ந்த டிரைவர் சிவகுமார் யாதவ் (32) என்பவரைக் கைது செய்து தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

அதில், சிவகுமார்  அப்பெண்ணை கட்டாய திருமணம் செய்வதற்காக கடத்தியதோடு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இக்குற்றத்துக்காக அவர் ஆயுள் முழுவதும், அதாவது அவர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ. 21,000 அபராதமும் விதித்தார்.

இத்தீர்ப்பைக் கேட்ட சிவகுமாரின் மனைவி மற்றும் இரு மகள்கள், பெற்றோர் கதறி அழுதனர். மேலும், சிவகுமாரின் மனைவி நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார்.

மேலும், அவர் தனது உத்தரவில் தில்லி சட்ட உதவி மையம் பாதிக்கப்பட்டு பெண்ணின் குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதோடு, குற்றவாளியின் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த வழக்கு விசாரணையின் போது காவல் துறையினர் 28 சாட்சிகளை முன்னிலைப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT