இந்தியா

இணையதள குற்றங்களைத் தடுக்க விரைவில் இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் பெருகி வரும் இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், தவறான தகவல்கள் மூலம் இளைஞர்கள் தவறானப் பாதைக்கு திருப்பப்படுவதை தடுக்கும் வகையிலும் விரைவில்  இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சார் ராஜ்நாத் சிங் கூறினார்.

PTI

இந்தியாவில் பெருகி வரும் இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், தவறான தகவல்கள் மூலம் இளைஞர்கள் தவறானப் பாதைக்கு திருப்பப்படுவதை தடுக்கும் வகையிலும் விரைவில்  இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சார் ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுதில்லியில் வியாழக்கிழமை தகவல் பாதுகாப்பு மாநாட்டை தொடக்கிவைத்து அவர் பேசுகையில்,  இணையதள பாதுகாப்பை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனத்துடன் செயல்படுகிறது என்றார்.

இணையவழி குற்றங்களைத் தடுப்பது குறித்து நிபுணர்குழு அளித்த ஆலோசனையின்படி, விரைவில் இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்.

ரூ. 400 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த மையம் இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் - ஐசி-4 (Indian Cyber Crime Coordination Centre- IC4) என அழைக்கப்படும். இதன்மூலம் இணைய வழி குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஐசி4 அமைப்பு மூலம் புகார்களும் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ராஜ்நாத்சிங்.

மேலும், இந்த மையம் இணைய வழி குற்றங்களைத் தடுப்பதற்கு சி.பி.ஐ. மற்றும் மாநில காவல் துறைக்கு தேவையானை அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT