முகப்பு
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் சோதனை சாவடி மீது காரில் மோதிய வெளிநாட்டு வாழ் இந்தியர் கைது

வாஹா அருகேயுள்ள இந்தியா- பாகிஸ்தான் கூட்டு சோதனைச் சாவடி மீது காரில் வந்து மோதியது தொடர்பாக வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 16 நவம்பர், 2015 at 3:55 PM
பகிர்:

வாஹா அருகேயுள்ள இந்தியா- பாகிஸ்தான் கூட்டு சோதனைச் சாவடி மீது காரில் வந்து மோதியது தொடர்பாக வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு 30 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது அட்டாரி- வாஹா கூட்டு சோதனை சாவடி மையம்.

இங்கு இன்று அதிகாலை அதிகாலை 3.30 மணிக்கு வேகமாக வந்த கார் ஒன்று முதல் வாயிலை உடைத்துக் கொண்டு, 'ஜீரோ பாயிண்ட்' எனப்படும் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள வாயில் அருகே சென்றுவிட்டது.

Advertisement

விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட எல்லை பாதுகாப்பு படை போலீஸார், காரில் இருந்த கனடா நாட்டு குடியுரிமை பெற்றவரும் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவருமான 50 வயது மதிக்கதக்கவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் அவர் நுழைந்தது எவ்வாறு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.