இந்தியா

கரும்பு அரவைக்கான அரசின் மானியம்: விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க முடிவு

கரும்பு விவசாயிகளுக்கான அரவை மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

IANS

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஆண்டில் ஒரு குவின்டால் அரவைக்கான அரசு மானியமாக ரூ. 4.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மானியத்தை வரும் காலங்களில் அரசே நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

கரும்பு அரவை ஆலையகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 21,000 கோடியாக அதிகரித்துள்ளது.  இதையடுத்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அரவைக்கான மானியத்தை நேரடியாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு, அரவை மானியமாக குவின்டாலுக்கு ரூ. 4.50 வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவை இந்திய கரும்பு ஆலை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT