பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 16 மில்லியனாக உயர்ந்துள்ளது.
சமூக வலைதளத்தில் டிவிட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கை கடந்த ஒரு வருடத்தில் 16 மில்லியனை தாண்டியுள்ளது.
கடந்த இரண்டு மாதத்தில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை கூடுதலாக 1 மில்லியன் உயர்ந்துள்ளது. தற்போது, 16.1 மில்லியனாக உள்ளதாக டிவிட்டர் அறிக்கை தெரிவித்துள்ளது.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பதவியேற்றுக்கொண்டது முதல் தற்போது வரை டிவிட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 16.1 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் டிவிட்டர் கணக்கைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 17 மில்லியனாக உள்ளது.
அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக, டிவிட்டரில் ஷாருக்கானை 16.2 மில்லியன் பேரும், அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 66.1 மில்லியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.