இந்தியா

சகிப்பின்மை குறித்த அமீர் கானின் பேச்சுக்கு பின்னால் காங்கிரஸின் சதி: பாஜக குற்றச்சாட்டு

இந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இந்தி நடிகர் அமீர் கானின் பேச்சுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் சதி இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

PTI

இந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இந்தி நடிகர் அமீர் கானின் பேச்சுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் சதி இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமீர் கான், இந்தியாவில் நிலவும் சகிப்பின்மையால், நாட்டை விட்டு வெளியேறி விடலாமா அவரது மனைவி கிரண் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

நாட்டில் அமைதியின்மை அதிகரித்து வருவதாலும், குழந்தைகளின் பாதுகாப்பை கருதியும் கிரண் இவ்வாறு கூறியதாக அமீர் கான் பேசினார்.

அமீர் கானின் இந்த கருத்துக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய அரசியல் சதி உள்ளது என பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக ஊடக தொடர்பாளர் ஷாநவாஷ்கான் ஹூசைன், இந்திய முஸ்லீம்களுக்கு இந்தியாவைவிட வேறு பாதுகாப்பான நாடு எதுவும் இல்லை என்றார்.

'பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லீம்களின் நிலை எவ்வாறு உள்ளது. சகிப்பின்மை எல்லா இடங்களிலேயும் உள்ளது.'

உலக நாடுகளிலேயே இந்தியாதான் மிகவும் மதசார்பற்ற நாடாக இருக்கிறது. இங்குதான்  முஸ்லீம்கள்  சமமாக நடத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் மோசமான நிலை நிலவுகிறது என அமீர் கான் நினைத்தால், அதுகுறித்து விளக்கமளித்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து சிந்திக்கலாம். இதுகுறித்து நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

இந்திய மக்களின் அன்பு மற்றும் மரியாதையால்தான் அமீர்கான் இவ்வளவு புகழ் மற்றும் செல்வாக்கை சம்பாதித்துள்ளார். புகழ்பெற்ற நடிகர்களின் கருத்துகள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கும் நிலையில், அமீர் போன்றோரின் இத்தகைய பேச்சுக்கள் நம் நாட்டுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.

அமீர் கானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ள ஹூசைன், இது இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் காங்கிரஸின் பிரசாரமாகும் என்றார்.

தில்லியில் நடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை மற்றும் பல்வேறு வகுப்புவாத கலவரங்களில் காங்கிரஸ் கட்சி பின்னணியில் இருந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தலை நிமிர்ந்து வரும் இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் நற்பெயரை கெடுத்து வருகிறது என்றார் ஹூசைன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT