இந்தியா

சகிப்பின்மை விவகாரம் குறித்து விவாதிக்க தயார்: வெங்கய்ய நாயுடு

அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்த எத்தகைய விவாதத்குக்கும் அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

IANS

அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்த எத்தகைய விவாதத்குக்கும் அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து கட்சி கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, சகிப்பின்மை விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு அரசு தயாராகவே இருப்பதாக கூறினார்.

நாட்டில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள்பட்டது. எனினும், எதிர் கட்சிகள் விரும்பினால் அரசு சகிப்பின்மை குறித்து விவாதம் நடத்தும் என்றார் நாயுடு.

நாளை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில், சகிப்பின்மை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT