இந்தியா

கொல்கத்தாவில் 3 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது

பாகிஸ்தான் நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக கொல்கத்தாவில் மூன்று பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்

IANS

பாகிஸ்தான் நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக கொல்கத்தாவில் மூன்று பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இர்ஷத் அன்சாரி, அஸ்பக் அன்சாரி, முகமது ஜஹாங்கீர் ஆகிய மூவரையும் கொல்கத்தா ஈக்பால்பூர் பகுதியில் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் ஐந்து லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், பல சட்டவிரோத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கொல்கத்தா சிறப்புப் படை பிரிவின் துணை ஆணையர் அகிலேஷ் சாருவேதி கூறினார்.

மேலும், அதில் ஒருவரிடமிருந்து ராணுவத்துக்காக போர்கப்பல்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் அமைவிடம் தொடர்பான வரைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

இந்தியர்களான மூவரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யிடம் பயிற்சி பெற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இவர்களுக்கும் உத்திரபிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி முகமது இசாஷ்க்கும் தொடர்பு உள்ளதாக என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT