தயாநிதி மாறனிடம் விசாரணையைத் துவக்கியது சிபிஐ
பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல்-ன் 300 உயர்- வேக தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, நவம்பர் 30ம் தேதி முதல் 6 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாறனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
இந்த உத்தரவுக்கு இணங்க, தயாநிதி மாறன் இன்று சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.