ராகுல் காந்தி குடியுரிமை பிரச்னை: வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மற்றும் நீதிபதி அமீதாவ ராய் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் நம்பகதன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Advertisement
மேலும், இந்த மனு உள்நோக்கம் கொண்டது என்ற நீதிபதிகள், நாங்களா அலைந்து திரிந்து மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என்று வினவினர்.
முன்னதாக இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என வலிறுத்திய சர்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தை வாங்கும் போது, இங்கிலாந்து குடிமகன் என குறிப்பிட்டிருந்ததாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்தே இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.