இந்தியா

பிச்சைக்காரருக்கு அடித்தது லக்: ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைக்காரருக்கு லாட்டரிச்சீட்டில் ரூ.65 லட்சம் பரிசு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PTI

திருவனந்தபுரம்: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைக்காரருக்கு லாட்டரிச்சீட்டில் ரூ.65 லட்சம் பரிசு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்தப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பொன்னையா (35). இவர் கல் குவாரியில் பணிபுரிந்து வந்த இவர், தவறி கீழே விழுந்ததில் அவர் தனது கால்களை இழக்க நேர்ந்தது. இந்நிலையில் மாற்றுத்திறனாளியான பொன்னையா குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கன்னியாகுமரி பகுதியில் பல இடங்களில் பிச்சை எடுத்துவந்தார்.

கடந்த 30-ம் தேதி கேரள மாநிலம் பனச்சமூடு பகுதியில் பிச்சை எடுத்த அவர், ரூ.30-க்கு லாட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார். அதில் தான் அவருக்குக் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. பொன்னையா வாங்கிய லாட்டரிச்சீட்டில் ரூ.65 பரிசு விழுந்தது.

பின்னர், லாட்டரிச் சீட்டை விற்றவர்கள் வாங்கிய நபரை தேடிக் கண்டுபிடித்தனர். அவருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் அவரது உறவினரின் கணக்கு மூலம் பரிசுப் பணத்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கடந்த மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் 22 வயது மதிக்கத்தக்கத் தொழிலாளி ஒருவருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT