இந்தியா

ஷீனா போரா வழக்கு: இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

PTI

இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உடல்நிலை பாதிப்புக்கு மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை காரணமாகக் கூறி இந்திராணி முகர்ஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி எச்.எஸ். மஹாஜன், இந்திராணி முகர்ஜிக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தரும்படி சிறைத் துறைக்கு உத்தரவிட்டார்.

அப்போது, இந்திராணி முகர்ஜி, தனக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை தனியார் மருத்துவமனையில், தனியார் மருத்துவரைக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்திராணிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ அறிக்கையை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT