புதுதில்லி: தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேட்டு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் இன்று தில்லி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு தொடர்பு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கெஜ்ரிவால் மீது தில்லி நீதிமன்றத்தில் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரனை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவால், குமார் விஸ்வாஷ், ஆசுதோஷ், சன்ஜாய் சிங், ராகவ் மற்றும் திபக் பாஜ்பாய் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.