முகப்பு
இந்தியா

ஹரியானாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: 14 பேர் காயம்

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2016 at 11:53 AM
பகிர்:

பானிபட்: ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்தனர்.

நேற்றிரவு பானிபட் பகுதியில் பாபார் பகுதியில் பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமான அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 14 பேர் பலத்த காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.