இந்தியா

கேரளக் கோயிலில் கோர விபத்து: 5 பேர் கைது

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புற்றிங்கல் தேவி கோயில் திருவிழாவில் நடந்த தீ விபத்து குறித்து 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ANI

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புற்றிங்கல் தேவி கோயில் திருவிழாவில் நடந்த தீ விபத்து குறித்து 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லம் அருகே பரவூரில் உள்ளது 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புற்றிங்கல் தேவி கோயில். இந்தக் கோயிலில் கடந்த 7 நாள்களாக திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளான சனிக்கிழமை நள்ளிரவு, பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண்பதற்கு கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை இரவு திரண்டிருந்தனர்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் வாண வேடிக்கையில் வெடிக்கப்பட்ட சில பட்டாசுகள், மற்றோர் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கு இடையே விழுந்து வெடித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடிக்கவே, நில அதிர்வு ஏற்பட்டது போன்று அப்பகுதியே பயங்கரமாகக் குலுங்கியது.

வெடிவிபத்தைத் தொடர்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால், வாணவேடிக்கை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த மக்கள், பாதுகாப்புக்காக எங்கே செல்வதென தெரியாமல் தவித்தனர். அப்போது அங்கு நேரிட்ட தீ விபத்தில் சிக்கியும், மண்டப இடிபாடுகளுக்கு இடையே சிக்கியும் 106 பேர் பலியாகினர். 383 பேர் காயமடைந்தனர்.

இந்த கோர விபத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT