இந்தியா

அபய் செளதாலா ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடு சென்றது எப்படி?: நீதிமன்றம் கேள்வி

தினமணி

புது தில்லி:  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓ.பி.செüதாலாவின் மகன் அபய் செளதாலா, நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் வெளிநாட்டுக்குச் சென்று ரியோ ஒலிம்பிக் போட்டிகளை ரசித்தது எப்படி? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அபய் செளதாலா மீதான வழக்கு, தில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் அண்மையில் விசாரûணைக்கு வந்தது. அப்போது, அவரது வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரான அபய் செüதாலா, ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடு சென்றுள்ளதால், அவர் வழக்கு விசாரணையில் பங்கேற்பதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது, நீதிமன்ற அனுமதி இல்லாமல், அபய் செளதாலா வெளிநாடு சென்றது எப்படி? என்று சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சய் கர்க் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற அனுமதி வாங்க வேண்டும் என்று ஜாமீன் உத்தரவில் கூறப்படாததால் அனுமதி கோரவில்லை என்று அபய் செüதாலாவின் வழக்குரைஞர் பதிலளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வாதிட கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்குரைஞர் அஜய் குமார் குப்தா கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, வரும் 17-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT