இந்தியா

ஸ்னேப்டீல் ஊழியர் கடத்தலின் பின்னணி என்ன? போலீஸ் பரபரப்பு தகவல்

ஸ்னேப்டீல் நிறுவனத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், ஒருதலைக் காதல் தான் காரணம் என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

IANS

ஸ்னேப்டீல் நிறுவனத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், ஒருதலைக் காதல் தான் காரணம் என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஸியாபாத் காவல்துறை அதிகாரி தர்மேந்திரா யாதவ் இது குறித்து கூறுகையில், ஸ்னேப்டீல் நிறுவனத்தின் செயற்குழு அதிகாரியாக இருக்கும் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், அவரை ஒருதலையாகக் காதலித்த நபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பனிபட்டைச் சேர்ந்த தேவேந்திரா என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடத்தலில் உதவி செய்ததாக உறவினர் ஒருவரையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், உள்ள பிரபல தனியார் ஆன்–லைன் வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’–ன் நிறுவனத்தில் சட்டத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் தீப்தி சர்னா, கடந்த 10–ந்தேதி மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது கடத்தப்பட்டார்.

ஆட்டோவில் வந்த 4 பேர் தீப்தியை கத்திமுனையில் கடத்திச் சென்றதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து காசியாபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீப்தியை தீவிரமாக தேட தொடங்கினர். மேலும் இது குறித்த தகவல் ஊடகங்களிலும் வெளியாகின. இதையடுத்து  அவர் கடந்த  வெள்ளிக்கிழமை வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT