டெராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பலர் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக நைனிடால், உதம்சிங் நகர், அல்மோரா, பூரி, டெராடூன், டெஹரி மற்றும் சாம்பாவட் மாவட்டங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு வங்காள விரிகுடா மற்றும் பஞ்சாப் இடையே நகர்ந்துள்ளது, எனவே, தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று மாநில வானிலை துறை இயக்குனர் விக்ரம் சிங் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.