இந்தியா

இஸ்ரேலுடன் இணைந்து தயாரித்த புதிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

இந்தியா-இஸ்ரேல் இணைந்து தயாரித்த புதிய ஏவுகணை பராக்-8 சோதனை வெற்றிகரமாக இன்று செயல்படுத்தப்பட்டது.

ANI

சண்டிப்பூர்: இந்தியா-இஸ்ரேல் இணைந்து தயாரித்த புதிய ஏவுகணை பராக்-8 சோதனை வெற்றிகரமாக இன்று செயல்படுத்தப்பட்டது.

இந்த ஏவுகணையை நேற்று சோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை 8.16 மணியளவில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இதுபோன்று தரையில் இருந்து வானத்தில் சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட உள்ளன. ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT