இந்தியா

சக்கர தீர்த்தத்தில் தங்கப் பல்லி தரிசனம்

தினமணி

திருமலையில் உள்ள சக்கர தீர்த்தத்தில் தங்கப் பல்லி தரிசனம் தந்தது.
 காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தங்கப்பல்லி, வெள்ளிப் பல்லி சிற்பங்களைத் தொட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. திருமலையில் பாபவிநாசம் மார்க்கத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் உண்மையாகவே தங்கப்பல்லி உள்ளது.
 சேஷாசல வனத்தில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் அரிய வகையைச் சேர்ந்தது தங்கப் பல்லி. தற்போது இது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
 இந்தப் பல்லி, சக்கர தீர்த்தத்தில் உள்ள பாறைகளின் இடுக்கில் வாழ்ந்து வருகிறது. திடீரென ஒருநாள் அது வெளிவந்து அனைவரின் கண்களுக்கும் தென்படும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பல்லியை யாரும் காணவில்லை. எனவே இப்பல்லி இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
 இந்நிலையில் கடந்த மகா சிவராத்திரி அன்று சக்கர தீர்த்தத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றபோது பாறை இடுக்கிலிருந்து தங்கப் பல்லி திடீரென வெளியில் வந்து அனைவருக்கும் தரிசனம் தந்தது. இரவில் தகத்தகவென மின்னிய தங்கப் பல்லியை கூடியிருந்த பக்தர்கள் தரிசித்தனர்.
 அறிவியல் உண்மை: இந்த தங்கப் பல்லியின் விலங்கியல் பெயர் "காலோடாக்டீலோடஸ் ஆரிஸ்'. இந்த உயிரினம் இரவில் மட்டுமே வெளியில் வரும் ஒரு அரிய வகையைச் சேர்ந்தது. முதிர், இள மஞ்சள் கலந்து தங்க நிறத்தில் ஜொலிக்கும். இது 150 மி.மீ. முதல் 180 மி.மீ. வரை நீளமாக வளரும். பெரும்பாலும் கற்பாறை இடுக்குகளில் மட்டுமே வாழும்.
 சூரியஒளி படாத குளிர்ந்த பிரதேசங்களில் அதிக அளவில் காணப்படும் இந்தப் பல்லி, 40 முதல் 50 முட்டைகள் வரை இடும். சாதாரண பல்லி போலல்லாது விந்தையாக சத்தமிடும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

SCROLL FOR NEXT