முகப்பு
இந்தியா

குப்வாராவில் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On : 18 மார்ச், 2016 at 11:59 AM
பகிர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று மாலை ஹந்த்வாரா அருகே பேதா வதார் என்ற பகுதியில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

Advertisement

இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.