இந்தியா

உலகளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களுக்கான போட்டியில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா

டைம் இதழ் வெளியிட்ட உலக அளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் தேர்வுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

PTI

டைம் இதழ் வெளியிட்ட உலக அளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் தேர்வுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டைம் இதழ் "டைம் 100" என்ற உலக அளவில் மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்ற பிரபலங்களின் பட்டியலை அடுத்த மாதம் வெளியிட உள்ளது.

இதனை முன்னிட்டு, மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள், சிறந்த சிந்தனையாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிறந்த பிரபலங்கள், கலை மற்றும் புகழ்பெற்ற சில நபர்கள் என 127 பேர் அடங்கிய பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

உலக மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் இன்னும் சக்தி வாய்ந்ததாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட 100 பேரின் பட்டியலில் மோடி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, மிர்சா பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவின் மிகச் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை, தனது தாய் நாட்டில் பல பெண் வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரியங்கா சோப்ராவை பற்றி குறிப்பிடுகையில், பாலிவுட்டில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றும் பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில், வெளிநாடு வாழ் இந்தியர்களான கூகுள் நிர்வாகி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிர்வாகி சத்யா நாடெல்லா ஆகியோரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT